விஜய், அஜித் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - கங்கை அமரன் தகவல்


விஜய், அஜித் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் - கங்கை அமரன் தகவல்
x

வெங்கட்பிரபு இயக்கத்தில் பான் இந்தியா படத்தில் விஜய், அஜித் நடிக்கவுள்ளதாக கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களாக இருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித்குமார். இவர்களுக்கு என லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சிவாஜி - எம்.ஜி.ஆர் , ரஜினி - கமல் வரிசையில் தமிழ் திரையுலகில் ரசிகர்களின் மனதில் விஜய் மற்றும் அஜித் நீங்காத இடம்பிடித்துள்ளனர்.

இருப்பினும் இவர்கள் இருவரும் சேர்ந்து திரைப்படம் நடித்தது இல்லை. இவர்கள் சேர்ந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள், திரையுலகினர் உட்பட பலர் பல சமயங்களில் விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விஜய், அஜித் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்து உள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் பான் இந்தியா படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


Next Story