'வாரிசு' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்


வாரிசு திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
x
தினத்தந்தி 20 Nov 2022 4:51 PM IST (Updated: 20 Nov 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

இதனை புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

சென்னை,

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே' பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியான 'ரஞ்சிதமே' பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட் ஆனது.

இந்த நிலையில் வாரிசு' திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இதனை புதிய'வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story