'பொய் இன்றி அமையாது உலகு' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டிரைலர் வெளியானது
'பொய் இன்றி அமையாது உலகு' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், டிரைலர் வெளியாகி உள்ளது.
சென்னை,
இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய திரைப்படம் 'பொய் இன்றி அமையாது உலகு'. இந்த படத்தில் விவேக் பிரசன்னா, சாக்ஷிஅகர்வால், டேனி அன்னி போப், ஷ்யாம் சித்தா, பிரவீன் ராஜ், அர்ஜுனன், ஜமுனா, சஹானா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பிரசாத் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு 'இசை பேட்டை' வசந்த் இசையமைத்துள்ளார். காமெடியுடன் கூடிய பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை தியா சினி கிரியேசன்ஸ் மற்றும் ரூல்ஸ் பிரேக்கர்ஸ் புரொடக்சன் இணைந்து தயாரித்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.