'விஜய் 66' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு : புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு..!
விஜய் 66படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய் 66 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய் 66 படத்தின் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் 66படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது .,விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என புதிய போஸ்டர் வெளியிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
And it's a schedule wrap for #Thalapathy66
— Sri Venkateswara Creations (@SVC_official) May 26, 2022
The team had an awesome time shooting for important sequences in this schedule. Excited to kickoff our next schedule super soon.#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/aaIP8ssAW2