வைரலாகும் விடுதலை படத்தின் மேக்கிங் புகைப்படங்கள்


வைரலாகும் விடுதலை படத்தின் மேக்கிங் புகைப்படங்கள்
x
தினத்தந்தி 11 Sept 2022 11:08 PM IST (Updated: 11 Sept 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

மேக்கிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது

தமிழ் சினிமாவின் ,முன்னணி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. இதில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். மேலும் நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இப்படத்தை ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடுதலை படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக தயாராவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் மேக்கிங் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story