நடிகர் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது


நடிகர் விஜய் சேதுபதி படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
x

இப்படம் தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

'குரங்கு பொம்மை' படப்புகழ் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தில் நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'புரொடக்ஷன் நம்பர் 20' என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க சில முன்னணி நடிகைகளிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும், இந்தப் படத்தில் கதாநாயகன் போலவே எதிர்கதாநாயகன் கதாபாத்திரமும் வலுவானதாக இருப்பதால் அதில் முக்கிய நடிகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிர ஆர்வம் காட்டி வருகிறது.

கிரைம் மற்றும் த்ரில்லர் களத்தைக் கொண்ட ஆக்ஷன் ட்ராமாவாக உருவாக உள்ள இப்படத்திற்கு பி. அஜ்னீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு மேற்கொள்கிறார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் எளிய பூஜையுடன் தொடங்கியது. மேலும், இப்படம் தொடர்பான அப்டேட் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story