சித்ராவின் குரலில் மனதை மயக்கும் வாரிசு படத்தின் 'அம்மா' பாடல் வெளியானது
வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது .
சென்னை,
தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வாரிசு'. படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்பக் கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. அண்மையில் 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள 'ரஞ்சிதமே' பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து எம்.எம்.மானசி பாடினார்.
இதையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான 'தீ தளபதி' பாடல் வெளியானது. . இந்நிலையில், தற்போது வாரிசு படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது .
'இட்ஸ் பார் யூ அம்மா' எனவும், 'சோல் ஆப் வாரிசு' என குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடலை விவேக் எழுதி உள்ளார், கே.எஸ்.சித்ரா பாடியுள்ளார்.
To all the indescribable MOTHER's bonding and unconditional love❤️#SoulOfVarisu is here for you!!
— Sri Venkateswara Creations (@SVC_official) December 20, 2022
▶️https://t.co/ZMAGrUg4KC
️@KSChithra mam
@MusicThaman
️@Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #Varisu