ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் டீசர் வெளியானது


ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள  கள்வன் படத்தின் டீசர் வெளியானது
x

இந்த டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

சென்னை,

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் 'கள்வன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதையடுத்து இப்படத்தின் டீசர் இன்று மாலை 4.44 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். காட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த டீசர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.


Next Story