விஜய் சேதுபதியின் 46-வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது


விஜய் சேதுபதியின் 46-வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது
x

நடிகர் விஜய் சேதுபதியின் 46-வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகிறது.

சென்னை,

விஜய்சேதுபதி 2010-ல் வெளியான 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, தர்மதுரை, விக்ரம் வேதா, 96 உள்ளிட்ட படங்கள் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தின.

தற்போது விஜய்சேதுபதியின் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஜய்சேதுபதி மீண்டும் போலீஸ் அதிகாரியாகவும், ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நாளை இரவு 7.40 மணிக்கு வெளியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story