சினிமாவில் நிறைய கஷ்டங்கள் உள்ளது - நடிகை ரகுல்பிரீத் சிங்


சினிமாவில் நிறைய கஷ்டங்கள் உள்ளது - நடிகை ரகுல்பிரீத் சிங்
x

சினிமாவில் நிறைய கஷ்டங்கள் உள்ளது என நடிகை ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரகுல்பிரீத் சிங் தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தியில் 3 படங்கள் கைவசம் உள்ளன. இந்த நிலையில் ரகுல்பிரீத் சிங் அளித்துள்ள பேட்டியில், ''சினிமாவிற்காக நான் நிறைய உழைக்கிறேன். கஷ்டங்களும் உள்ளது. கஷ்டப்பட்டு எடுத்த படத்தை நான் தியேட்டரில் வெளியிடுவதைத்தான் விரும்புகிறேன். எனக்கு பேய், திகில் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படிப்பட்ட படங்களை ஓ.டி.டி.யில் பார்க்கலாம். ஆனால் நல்ல கதையம்சம் உள்ள படங்களை கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கத்தான் விரும்புவேன். வீட்டில் சினிமா பார்க்கும்போது தியேட்டரில் பார்க்கும் அனுபவம் இருக்காது.

சினிமாவிற்காக ஒவ்வொருவரும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நடிகர்-நடிகைகள் கொஞ்சம் குறைவாக உழைத்தாலும் கேமராமேன், உதவி டைரக்டர்கள், லைட் மேன் போன்றவர்கள் ஒரு நாளைக்கு 14 முதல் 15 மணி நேரம் உழைக்கிறார்கள். அவர்களின் கஷ்டத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதை கருத்தில் கொண்டாவது சினிமாவை தியேட்டரில் பார்க்க வேண்டும்" என்றார்.


Next Story