சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த உக்ரைன் நடிகை
சிவகார்த்திகேயன் நடிக்கும் 20-வது படத்தில், அவருக்கு உக்ரைன் நாட்டு நடிகை ஒருவர் ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடித்து அடுத்தடுத்து திரைக்கு வந்த டாக்டர், டான் படங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. அயலான் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தொடர்ந்து தமிழ், தெலுங்கில் தயாராகும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ஜதி ரத்னதாலு படத்தை இயக்கி பிரபலமான அனுதீப் டைரக்டு செய்கிறார். இது சிவகார்த்திகேயனுக்கு 20-வது படம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடிக்கிறார்.
பல நடிகைகளை பரிசீலித்து இறுதியாக இவரை தேர்வு செய்துள்ளனர். மரியா ரியாபோசப்கா பல சர்வதேச படங்களில் நடித்து பாராட்டு பெற்றவர். தற்போது சிவகார்த்திகேயனும், மரியா ரியாபோசப்காவும் சென்னையில் படத்துக்கான நடன பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதில் ஜோடியாக சாய்பல்லவி வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கிறார்.