"வாத்தி" திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
"வாத்தி" திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'வாத்தி'. பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது.
இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது.
இந்நிலையில், நடிகர் தனுஷ் எழுதிய "வாத்தி" திரைப்படத்தின் முதல் பாடல் நவம்பர் 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ஒரு போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
'வாத்தி' திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.