வெங்கட் பிரபு - நாக சைதன்யா படத்தின் புதிய அப்டேட்


வெங்கட் பிரபு - நாக சைதன்யா  படத்தின் புதிய அப்டேட்
x

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார்.

இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பா ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

இப்படத்தின் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மேலும், இதில் சரத்குமார், வென்னேலா கிஷோர், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி மற்றும் பிரேமி விஷ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை நடிகர் நாக சைதன்யா பிறந்த நாளன்று வெளியாகும் என இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story