பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - விஜய், அஜித் ரசிகர்களுக்கு எச்சரிக்கை


பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை - விஜய், அஜித் ரசிகர்களுக்கு எச்சரிக்கை
x
தினத்தந்தி 10 Jan 2023 2:15 PM IST (Updated: 10 Jan 2023 2:17 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

நெல்லை,

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் தங்களது படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என 3 மாதங்களுக்கு முன்பே அறிவித்தாலும், படங்களின் ரிலீஸ் தேதி சஸ்பென்ஸாகவே வைக்கப்பட்டு இருந்தது. இரண்டு படங்களின் டிரைலர்களிலும் குறிப்பிடப்படாத ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதன்படி ஜனவரி 11-ம் தேதி( நாளை) அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசும் மோதுகின்றன. படம் வெளியாக இன்னும் சிலமணி நேரங்களே உள்ளன இரண்டு படங்களின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய், அஜித் திரைப்படங்கள் 8 ஆண்டுகள் கழித்து ஒரே நாளில் வெளியாவதால் அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி எழந்துள்ளது.

நெல்லையில் வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.அதன்படி பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் கூடாது""பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை" எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அரசின் சட்ட திட்ட விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள விஜய், அஜித் ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story