ரூ.400 கோடி வசூல் சாதனை படைத்த விக்ரம்...!
சென்னை,
கமல் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் விக்ரம். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் விக்ரம் வெளிவந்து 23 நாட்கள் ஆகிய நிலையில் தற்போது படம் மிகப்பெரும் வசூல் சாதனையை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் தற்போது வரை ரூ.400 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மட்டும் ரூ.170 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது.
அதேபோல, கேரளாவில் 38.75 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 36 கோடி, கர்நாடகாவில் 24.2 கோடி, மற்ற மாநிலங்களில் 16.25 கோடி என இந்தியாவில் மட்டும் 287.2 கோடி ரூபாய் வசூலை வாரி குவித்திருக்கிறது விக்ரம் படம்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியான விக்ரம் படத்துக்கு 25வது நாளை எட்டினாலும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.