விக்ரம் படத்தின் வீடியோ பாடல் வெளியீடு..!
விக்ரம்' படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது
சென்னை,
மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், 'விக்ரம்' படத்தின் வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கிளைமேக்ஸில் வரும் 'ஒன்ஸ் அபான் ஏ டைம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
The MUCH AWAITED #OnceUponATime Video Song OUT NOW! ❤️
— Sony Music South (@SonyMusicSouth) July 28, 2022
➡️ https://t.co/kAmum5N1cs@ikamalhaasan @Dir_Lokesh @anirudhofficial @Udhaystalin @VijaySethuOffl #FahadhFaasil #Mahendran @RKFI @spotifyindia @turmericmediaTM @RedGiantMovies_#Vikram pic.twitter.com/RiWHvvod0S