பிரபல நடிகர் விக்ரம் கோகலே உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்


பிரபல நடிகர் விக்ரம் கோகலே உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்
x

பிரபல மராட்டிய நடிகர் விக்ரம் கோகலே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர் கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார். 77 வயதான விக்ரம் கோகலே நவம்பர் 5ஆம் தேதி மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்த போதிலும் விக்ரமின் இருதயம், சிறுநீரகம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை கோமா நிலைக்கு சென்ற விக்ரம் கோகலே, வென்டிலேட்டர் சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், விக்ரம் கோகலே காலமானதாக நேற்று இரவு செய்திகள் பரவிய நிலையில், இதை அவரது மனைவி விருஷாலி மறுத்துள்ளார். அவரது உடல் நிலை குறித்த தகவல்களை மருத்துவமனை இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கும் என்றார்.

விக்ரம் கோகலே பாரம்பரியமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது சந்திரகாந்த் கோகலேவும் மராத்தி நாடக நடிகராவார். இவரது கொள்ளுப்பாட்டி துர்காபாய் காமத் இந்தியாவின் முதல் பெண் சினிமா நடிகை ஆவார்.

இவர் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என திரை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்திகளை பதிவிட்டுவருகின்றனர்.


Next Story