நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது - ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்
ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் என்று குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை,
ராகவா லாரன்ஸ் தற்போது 'ருத்ரன்', 'சந்திரமுகி 2', 'அதிகாரம்', 'துர்கா' உள்ளிட்ட பல படங்கள் நடித்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் 'சந்திரமுகி 2' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பிற்காக லாரன்ஸ் தயாராகி வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் தனது வலைதளப் பக்கத்தில் அவருடைய உடலுக்காக அவர் எடுக்கும் முயற்சி மற்றும் அவர் இயக்கி வரும் அறக்கட்டளை குறித்தும் பதிவிட்டிருந்தார். மேலும் இனி மக்களுக்குச் சேவை செய்யும் முழுப் பொறுப்பையும் நானே ஏற்க முடிவு செய்துள்ளேன். எனவே, தனது அறக்கட்டளைக்கு உங்கள் பணத்தை நன்கொடையாக வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் என்று குறிப்பிட்டு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன். சேவையேகடவுள் என்று பதிவிட்டு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
என் வாழ்க்கையில் ஒரு மாற்றம்.
— Raghava Lawrence (@offl_Lawrence) September 18, 2022
இனி நான் யாருக்கு உதவி செய்தாலும், அவர்கள் என் காலில் விழக்கூடாது என கருதுகிறேன். அவர்களின் காலில் நான் விழுந்துதான் என் சேவையைச் செய்வேன்.#சேவையேகடவுள் pic.twitter.com/YtfeIsKl1v