யோகி பாபு நடித்துள்ள 'பொம்மை நாயகி' படத்தின் புதிய பாடல் வெளியானது


யோகி பாபு நடித்துள்ள பொம்மை நாயகி படத்தின் புதிய பாடல் வெளியானது
x

யோகி பாபு நடித்துள்ள 'பொம்மை நாயகி' திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இந்த படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைக்க, அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'பொம்மை நாயகி' படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. 'கடற்கரை காத்து' என்ற இந்த பாடலை சித்தன் ஜெயமூர்த்தி, ஷான் இணைந்து எழுதியுள்ளனர். ராக்ஸ்டார் ரமணி அம்மாள் பாடியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story