இளம் நடிகையை அலுவலகத்தில் வைத்து பூட்டிய நபர்


இளம் நடிகையை அலுவலகத்தில் வைத்து பூட்டிய நபர்
x

தனியார் நிறுவன ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.

கொச்சி

மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், அய்யப்பனும் கோஷியும் போன்ற படங்களில் நடித்தவர அன்ன ராஜன். இவர் கொச்சியில் புதிய சிம் வாங்குவதற்காக தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அலுவலகத்தில் பணிபுரிந்த ஊழியருடன் புதிய சிம் வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அன்ன ராஜன் அருகிலிருந்த போலீஸ்நிலையத்தில் தொலைத் தொடர்பு நிறுவன ஊழியர் மீது புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story