வாரிசு நடிகர் மீது புகார்!
நான்கெழுத்தில் பெயரை கொண்ட வாரிசு நடிகர் தனது படம் திரைக்கு வருவதற்கு உதவும்படி, ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டாராம்.
வாரிசு நடிகர் உத்தரவாதம் அளித்ததன் பேரில், அந்த தயாரிப்பாளர் ஒரு பெரிய தொகையை கொடுத்தாராம். படம் எதிர்பார்த்த அளவுக்கு வசூல் செய்யவில்லை. கடனாக கொடுத்த தொகையை திருப்பி தரும்படி வாரிசு நடிகரிடம் அந்த தயாரிப்பாளர் கேட்க–‘‘நான் உங்களுக்கு ஒரு படம் நடித்து கொடுக்கிறேன்’’ என்று வாரிசு நடிகர், தயாரிப்பாளரை சமாதானப்படுத்தி இருக்கிறார்.
இப்போது, வாரிசு நடிகர் சொன்னபடி நடித்து கொடுக்க மறுக்கிறாராம். தயாரிப்பாளர் தன்னை சந்திக்கிறவர்களிடம் எல்லாம், வாரிசு நடிகர் பற்றி புகார் செய்து வருகிறார்!
Related Tags :
Next Story