`அட்வான்ஸ்' வாங்கி குவிக்கும் நடிகர்!


`அட்வான்ஸ் வாங்கி குவிக்கும் நடிகர்!
x
தினத்தந்தி 1 Feb 2019 8:00 AM IST (Updated: 31 Jan 2019 9:37 PM IST)
t-max-icont-min-icon

தன்னை தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களிடமும் இரண்டெழுத்து நாயகன், `அட்வான்ஸ்' தொகையை வாங்கி குவிக்கிறாராம்.

ஆனால், ஒப்புக்கொண்டபடி அவர் நடிப்பதில்லை. அதுபற்றி கேட்பதற்கு சென்றால், அவரை பார்க்க முடிவதில்லை என்று சில தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்கள்.

``அந்த நடிகர் நடிப்பதாக கூறி, `அட்வான்ஸ்'சை வாங்கும்போதே ``இந்த படத்தில் நடிக்க கூடாது'' என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டுதான் `செக்'கை வாங்குவார். அவர் நினைத்த மாதிரியே அந்த படத்தில் நடிக்காமல், டிமிக்கி கொடுத்து விடுவார்'' என்று ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறுகிறார்!


Next Story