`கன்னித்தீவு' படத்தில் பிரச்சினையை எதிர்த்து போராடும் 4 பெண்கள்
திரிஷா நடிப்பில் உருவாகி வரும் `கர்ஜனை' படத்தை இயக்கியவர், சுந்தர் பாலு. இவர் அடுத்து இயக்கி வரும் படம், `கன்னித்தீவு.'
`கன்னித்தீவு' படத்தை கிருத்திகா புரொடக்ஷன் தயாரித்து வருகிறது. இதில், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க, அவருடன் ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, சுபிக்ஷா மற்றும் பலரும் நடித்து வருகிறார்கள்.
`கன்னித்தீவு' பற்றி அதன் டைரக்டர் சுந்தர் பாலு கூறியதாவது:-
``4 பெண்கள் வாழ்ந்து வரும் பகுதியில் ஒரு பிரச்சினை நடக்கிறது. அதை எதிர்த்து அந்த 4 பெண்களும் போராடி வெற்றி பெறுகிறார்கள். இந்த போராட்டம் வேறொரு வடிவத்தில் இவர் களுக்கே பிரச்சினையாகி விடுகிறது.
அதன்பின், இவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களையும், கஷ்டங்களையும் சந்தித்து வருகிறார்கள். அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள்? என்பதே கதை. இதில், துணிச்சலான பெண்களாக வரலட்சுமி சரத்குமார், ஆஷ்னா சவேரி, ஐஸ்வர்யா தத்தா, சுபிக்ஷா ஆகிய 4 பேரும் நடித்து வருகிறார்கள். சண்டை, திகில், துணிச்சல் மிகுந்த காட்சிகள் நிறைந்த படமாக, `கன்னித்தீவு' உருவாகி வருகிறது.
ஆரோல் கரோலி இசையமைத்து வருகிறார். சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார்.
Related Tags :
Next Story