சினிமா துளிகள்

குற்றாலத்தில், தனுஷ் படப்பிடிப்பு! + "||" + Sneha plays the main role

குற்றாலத்தில், தனுஷ் படப்பிடிப்பு!

குற்றாலத்தில், தனுஷ் படப்பிடிப்பு!
முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார்
மூன்றாம் பிறை, ஆனஸ்ட் ராஜ், ஜெயம் கொண்டான், தொடரி, விவேகம், விஸ்வாசம் உள்பட 33 படங்களை தயாரித்து இருக்கிறது, சத்யஜோதி பிலிம்ஸ். இந்த பட நிறுவனம் தயாரிக்கும் 34-வது படத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் சினேகா நடிக்கிறார். இன்னொரு பிரபல கதாநாயகியும் இடம் பெறுகிறார். துரைசெந்தில்குமார் டைரக்டு செய்கிறார்.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை!