ராசிகன்னாவின் ரகசிய ஆசை!


ராசிகன்னா
x
ராசிகன்னா
தினத்தந்தி 12 May 2019 2:55 PM IST (Updated: 12 May 2019 2:55 PM IST)
t-max-icont-min-icon

ராசிகன்னா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழி படங்களில், முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

விஷால் ஜோடியாக இவர் நடித்துள்ள `அயோக்யா' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து இவர் சித்தார்த் ஜோடியாக, `சைதான்கி பச்சா' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவரிடம், ``உங்களின் ரகசிய ஆசை என்ன?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு ஒளிவு மறைவு இல்லாமல் ராசிகன்னா துணிச்சலாக பதில் அளித்தார். ``சூர்யாவுக்கு திருமணமாகி விட்டது. அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றால், அவரை திருமணம் செய்து இருப்பேன். சூர்யா அவருடைய மனைவி ஜோதிகாவிடமும், குழந்தைகளிடமும் நடந்து கொள்ளும் விதம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது'' என்று அவர் கூறினார்.

Next Story