‘அங்காடி’யும், அரைகுறை உடையும்!
புதிதாக தயாராக இருக்கும் ஒரு தமிழ் படத்துக்கு ‘தழுக்...மொழுக்’ என்று வசீகர உடற்கட்டை கொண்ட ஒரு கதாநாயகி தேவைப்பட்டார். யாரை நடிக்க வைக்கலாம்? என்று படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தினார்.
எல்லோரும் ஒருமித்த குரலில், ‘அங்காடி’ நாயகியின் பெயரை சொன்னார்கள். அவரையே தயாரிப்பாளரும் ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பும் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பிலேயே ‘அங்காடியிடம்’ ஒரு கால் சட்டையை கொடுத்து அணிந்து வர சொன்னார்களாம். நொந்து போனார், ‘அங்காடி.’
“இந்த அளவு கவர்ச்சியாக நடிக்க முடியாது. நான் வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்...” என்றாராம். இருதரப்பினர் இடையே இப்போது சமரசம் ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன!
Related Tags :
Next Story