மகேஷ், கல்யாணி நாயர் நடிக்கும் ‘நங்கூரம்’
‘அங்காடி தெரு’ மகேஷ்-மலையாள நடிகை கல்யாணி நாயர் ஜோடியாக நடிக்கும் படத்துக்கு, ‘நங்கூரம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
ரேகா, நிழல்கள் ரவி, பொன்னம்பலம், ‘மகாநதி’ சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இதில் நடிக்கிறார்கள். கா.கலைக்கோட்டுதயம் தயாரிக்கிறார்.
படத்தை பற்றி டைரக்டர் ஏ.எஸ்.மைக்கேல் சிவன் கூறும்போது, “இது, குற்றப்பின்னணி கதையம்சம் கொண்ட படம். நகரில், 35 வயதில் இருந்து 40 வயதுக்குள் இருக்கும் பெண்களை குறிவைத்து கொலைகள் நடைபெறுகின்றன. கொலைகாரன் யார்? கொலைகளுக்கான காரணம் என்ன? என்பதை ஒரு போலீஸ் அதிகாரி துப்பறிந்து கண்டுபிடிப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது” என்றார்.
Related Tags :
Next Story