சிகையலங்காரத்தை மாற்றியது ஏன்?


சிகையலங்காரத்தை மாற்றியது ஏன்?
x
தினத்தந்தி 1 March 2020 2:45 AM GMT (Updated: 29 Feb 2020 11:39 AM GMT)

ஓவியா, ஒளிவு மறைவு இல்லாதவர். மனம் திறந்து பேசுபவர். அவருடைய சிரிப்பில் முழுமையான வெகுளித்தனம் வெளிப்படும்.

ஓவியா, கொஞ்ச நாட்கள் பேசப்படாத கதாநாயகியாக இருந்தார். `பிக்பாஸ்' நிகழ்ச்சி இவருக்கு கைகொடுத்தது. அங்கே இவருக்காக, `ஆர்மி' தொடங்கப்பட்டது. ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்தது.

`பிக்பாஸ்' வீட்டில் இருந்து வெளியில் வந்த பின், ஓவியா தனது சிகையலங்காரத்தை மாற்றினார். `பாப் கிராப்' வெட்டிக் கொண்டார். அவருடைய புதிய சிகையலங்காரம் நிறைய ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. அவரிடம், சிகையலங்காரம் பற்றி கேள்வி கேட்டனர்.

ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓவியா ஒளிவு மறைவு இல்லாமல் அளித்த பதில்: ``நான் மூளையை வளர்க்க விரும்புகிறேன். முடியை அல்ல... வருத்தப்படாதீங்க... நான், `விக்' வைத்துக் கொள்கிறேன்.''

Next Story