சினிமா துளிகள்

‘சாமி’ நடிகருக்கு சிபாரிசு செய்த பிரபல நாயகி! + "||" + For the Sami actor The recommended heroine

‘சாமி’ நடிகருக்கு சிபாரிசு செய்த பிரபல நாயகி!

‘சாமி’ நடிகருக்கு சிபாரிசு செய்த பிரபல நாயகி!
ஒரு பிரபல கதாநாயகி, ‘சாமி’ நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாராம்.
அந்த ‘சாமி’ நடிகர் திரையுலகுக்கு வந்த நேரத்தில், அவருடைய அழகான தோற்றம் பிரபல கதாநாயகிகளை கவர்ந்து இழுத்தது. கதாநாயகனாக நடித்து வந்த அவர், இப்போது வில்லனாகி விட்டார். இருப்பினும் அவர் சில கதாநாயகிகளின் ‘கனவுக்கண்ணனாகவே இருந்து வருகிறார்.


குறிப்பாக ஒரு பிரபல கதாநாயகி, ‘சாமி’ நடிகருடன் இணைந்து நடிக்க ஆசைப்படுகிறாராம். அடுத்து அவர் நடிக்க இருக்கும் ஒரு புதிய படத்தில் தனக்கு ஜோடியாக, ‘சாமி’ நடிகரை ஒப்பந்தம் செய்யும்படி சிபாரிசு செய்து இருக்கிறார்! அவருடைய ரசனையை அறிந்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார், கதை சொல்ல வந்த புது டைரக்டர்!