சினிமா துளிகள்

2-வது முறையாக விருது கிடைக்குமா? + "||" + Getting the award for the 2nd time?

2-வது முறையாக விருது கிடைக்குமா?

2-வது முறையாக விருது கிடைக்குமா?
நடிகை கீர்த்தி சுரேசுக்கு 2-வது முறையாக விருது கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நடிக்கும்போது கதாபாத்திரமாகவே மாறும் ஒரு சில நடிகர்- நடிகைகளில் கீர்த்தி சுரேசும் ஒருவர். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் (தமிழில், ‘நடிகையர் திலகம்,’ தெலுங்கில், ‘மகாநடி) அவர் கதாபாத்திரத்துடன் ஒன்றினார். அதற்கு பலன் கிடைத்தது. அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

தற்போது அவர் நடிப்பில் வெளி வந்துள்ள ‘பென்குயின்’ படத்திலும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். 2-வது முறையாக அவருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்கள்!