ரோட்டில் தற்கொலை நாடகம் - பிரபல நடிகர் மீது வழக்கு


ரோட்டில் தற்கொலை நாடகம் - பிரபல நடிகர் மீது வழக்கு
x
தினத்தந்தி 3 May 2022 9:57 AM (Updated: 3 May 2022 9:57 AM)
t-max-icont-min-icon

படத்தின் புரமோஷனுக்காக, நடுரோட்டில் போலி தற்கொலை நாடகம் ஆடிய நடிகர் விஷ்வக் சென் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சென். இவர் நடித்துள்ள ‘அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’ என்ற படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், ஐதராபாத்தில் நெரிசல் மிகுந்த சாலையில், நடிகர் விஷ்வக் சென்னும், அவரது நண்பர்களும் காரில் வந்தபோது ஒரு ரசிகர் பெட்ரோல் கேனுடன் காரை மறித்து ‘அசோக வனம்லோ அர்ஜுன கல்யாணம்’ படத்தின் கதாநாயகனை நான் பார்க்க வேண்டும். இல்லையேல் இங்கேயே பெட்ரோலை ஊற்றி தீக்குளிப்பேன் என்று மிரட்டினார். உடனே விஷ்வக் சென் நண்பர்களுடன் காரில் இருந்து இறங்கி அந்த ரசிகரை தடுத்தார். கையில் இருந்த பெட்ரோல் கேனையும் பிடுங்க முயற்சித்தார். இந்த ரகளையால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். 

விசாரித்ததில் விஷ்வக் சென் படத்தின் விளம்பரத்துக்காக தண்ணீர் கேனுடன் கூட்டாக போலி தற்கொலை நாடகம் ஆடியது தெரிய வந்தது. நடுரோட்டில் இப்படி அநாகரிகமாக நடப்பதா என்று வலைத்தளத்தில் விஷ்வக் செனை பலரும் கண்டித்தனர். பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக அருண்குமார் என்ற வக்கீல் விஷ்வக் சென் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

1 More update

Next Story