மீண்டும் வெளியாகும் யாத்திசை


மீண்டும் வெளியாகும் யாத்திசை
x

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘யாத்திசை’. இப்படம் ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தரணி ராசேந்திரன் இயக்கத்தில் வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'யாத்திசை'. இதில் சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதையாக 'யாத்திசை' உருவாகி கடந்த ஏப்ரல் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படம் குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், 'யாத்திசை' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 12-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.


Next Story