கவனம் ஈர்க்கும் 'ஆதாரம்' படத்தின் டிரைலர்


கவனம் ஈர்க்கும் ஆதாரம் படத்தின் டிரைலர்
x

இயக்குனர் கவிதா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஆதாரம்’. இப்படத்தின் டிரைலர் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குனர் கவிதா இயக்கத்தில் புதுமுக நடிகர் அஜித் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கு திரைப்படம் 'ஆதாரம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா நடித்திருக்கிறார். மேலும், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன், கதிரவன் பாலு, அட்ரஸ் கார்த்திக் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேட்டினி ஃபோல்க்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.பிரதீப்குமார் மற்றும் ஆப்ஷா மைதீன் தயாரிக்கும் இந்த படத்திற்கு வசனங்களை கவிதா மற்றும் ராசி தங்கதுரை இணைந்து எழுதியுள்ளனர். என்.எஸ்.ராஜேஷ் குமார் மற்றும் ஶ்ரீவட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், 'ஆதாரம்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இந்த டிரைலர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


Next Story