அதிவேகமாக குவியும் வசூல்.. கொண்டாட்டத்தில் ஆதிபுருஷ் படக்குழு


அதிவேகமாக குவியும் வசூல்.. கொண்டாட்டத்தில் ஆதிபுருஷ் படக்குழு
x

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இப்படம் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் 'ஆதிபுருஷ்' . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர்.

ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த 16-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு சிலர் ஆதரவும் பலர் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் மிகவும் மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலர் விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'ஆதிபுருஷ்' திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலக அளவில் ரூ.410 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story