ஐஸ்வர்யா கவுடா நாயகியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் 'எங்கேஜ்மெண்ட்'


ஐஸ்வர்யா கவுடா நாயகியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் எங்கேஜ்மெண்ட்
x

ஐஸ்வர்யா கவுடா, தற்போது ‘ரேவ் பார்ட்டி’ என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து இவர் பான் இந்திய படமாக உருவாகவுள்ள ‘எங்கேஜ்மெண்ட்’ படத்தில் நடிக்கவுள்ளார்.

'ஜாகுவார்' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஐஸ்வர்யா கவுடா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கன்னட திரைப்படம் 'பிரவீணா'-வில் தனது நடிப்பு மூலம் பாராட்டுகளைப் பெற்றார். இவர் தற்போது விரைவில் வெளியாக இருக்கும் 'ரேவ் பார்ட்டி' என்ற திரைப்படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில், இயக்குனர் ராஜு போனகானி இயக்கத்தில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'எங்கேஜ்மெண்ட்' (Engagement) படத்தில் ஐஸ்வர்யா கவுடா நாயகியாக நடிக்கிறார்.

போதைப்பொருள் மற்றும் அரசியலின் இருண்ட பாதையில் செல்லும் இளைஞர்களின் கதையை சொல்லும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள 'ரேவ் பார்ட்டி' கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. போனகானி எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

'எங்கேஜ்மெண்ட்' படத்தின் வாய்ப்பு பற்றி நடிகை ஐஸ்வர்யா கவுடா கூறுகையில், "சிறு வயதில் இருந்தே எனக்கு நடிப்பில் ஆர்வம் அதிகம். 2016 ஆம் ஆண்டு 'ஜாகுவார்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன். அதன்பிறகு 'பிரவீணா' படமும் எனக்கு பெரிய பிரேக் கொடுத்தது. தற்போது 'ரேவ் பார்ட்டி' படத்தில் எனது திறமையை பார்த்து இயக்குநர் ராஜு போனாகானி 'எங்கேஜ்மெண்ட்' படத்தில் என்னை கதாநாயகியாக நடிக்க வைத்திருக்கிறார். இந்த வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மகிழ்ச்சியாக இருப்பதோடு, பெரும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. 'எங்கேஜ்மெண்ட்' படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்." என்றார்.


Next Story