மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் அர்ஜுன் தாஸ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


மீண்டும் ஹீரோவாக களமிறங்கும் அர்ஜுன் தாஸ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
x

இயக்குனர் சாந்தகுமார் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

'மெளனகுரு', 'மகாமுனி' படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் கவனம் பெற்றவர் இயக்குனர் சாந்தகுமார். இவர் இயக்கவுள்ள மூன்றாவது படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கு இப்படத்தை 'டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி' தயாரிக்கிறது.

இதில், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜித் ஷங்கர், ஜிஎம் சுந்தர், எஸ்.ரம்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு 'ரசவாதி – The Alchemist' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. மேலும், இது தொடர்பான போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

அர்ஜுன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அநீதி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story