ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அதர்வாவின் 'மத்தகம்'


ஹாட்ஸ்டாரில் வெளியாகும் அதர்வாவின் மத்தகம்
x

அதர்வா- மணிகண்டன் இணைந்து நடிக்கும் வெப்தொடர் 'மத்தகம்'. இதன் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில் உருவாகியுள்ள வெப்தொடர் 'மத்தகம்'. இந்த வெப்தொடரில் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த வெப்தொடரை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. இதன் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப்தொடருக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், 'மத்தகம்' வெப்தொடரின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வெப்தொடர் வருகிற 18-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய ஏழு மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.


Next Story