சரக்கு, கஞ்சாவ விட பெரிய போதை பணம்.. வைரலாகும் ருத்ரன் பட டிரைலர்
ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'ருத்ரன்' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதில் சரக்கு, கஞ்சாவ விட பெரிய போதை பணம் போன்ற வசனங்கள் இடம்பெற்று வரவேற்பை பெறுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தின் டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ருத்ரன் திரைப்படம் வருகிற ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.