பேரனுக்காக படம் இயக்கும் டி.ராஜேந்தர்


பேரனுக்காக படம் இயக்கும் டி.ராஜேந்தர்
x

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக இருப்பவர் டி. ராஜேந்தர். இவர் தற்போது பேரனை வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவராக இருப்பவர் டி. ராஜேந்தர். இவர் தன்னுடைய மகன் சிலம்பரசனை குழந்தை பருவத்திலிருந்தே திரை உலகிற்கு தயார் செய்து வந்தது போலவே தன்னுடைய மகள் இலக்கியாவின் மகனையும் சினிமாவிற்காக தயார் செய்து வருகிறார். இசை, நடனம் என்று கற்றுக் கொடுத்து வந்தநிலையில் தற்போது பேரனை வைத்து குழந்தைகளுக்கான ஒரு திரைப்படத்தை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

சிலம்பரசனுக்கு எங்க வீட்டு வேலன் என்ற படம் எப்படி வெற்றிப் படமாக அமைந்ததோ அதைப் போலவே பேரனுக்கும் தகுந்த ஒரு கதையை எழுதி படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார். இதற்காக பிரமாண்டமான அரங்கம் ஒன்றை டி.ராஜேந்தர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story