நெல்சன் இயக்கத்தில் கமலுடன் இணையும் தனுஷ்?
நெல்சன் திலிப்குமார் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலிப்குமார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தை இயக்கியிருந்தார்.
அதன்பின்னர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது ரஜினி இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நெல்சன் திலிப்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் படத்தை நெல்சன் இயக்கவுள்ளதாகவும், இதில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. நெல்சன்-தனுஷ்-கமல் கூட்டணி இணையவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.