கண்ணு வேணும்னு கேட்டியாமே..! ரீ-ரிலீசாகும் வேட்டையாடு விளையாடு
கமல் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில் வேட்டையாடு விளையாடு படம் ஜூன் மாதம் திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Related Tags :
Next Story