கார்த்தியுடன் இணைந்த '96' பட இயக்குனர்


கார்த்தியுடன் இணைந்த 96 பட இயக்குனர்
x

நடிகர் கார்த்தி தற்போது 'ஜப்பான்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்தியா திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி, தற்போது இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்'திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக 'துப்பறிவாளன்', 'நம்மவீட்டு பிள்ளை' போன்ற படங்களில் நடித்த அனு இமானுவேல் நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், கார்த்தியின் 27வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி '96' படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கம் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் அரவிந்த்சாமி நடிக்கிறார். இப்படத்திற்கு பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைத்தளத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.


Next Story