படப்பிடிப்பில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கவின்


படப்பிடிப்பில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய கவின்
x

நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கவின் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.

டாடா பட வெற்றியை தொடர்ந்து கவின், நடன இயக்குனர் சதீஷ் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத் முதல் முறையாக கவினுடன் இணைந்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

நடிகர் கவின் நேற்று தனது பிறந்தநாளை கொண்டினார். இவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் கவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Next Story