தெய்வதிருமகள் பட காட்சியை பார்த்து தேம்பி தேம்பி அழுத நபர்.. ஜிவி பிரகாஷ் பகிர்ந்த டுவீட் வைரல்


தெய்வதிருமகள் பட காட்சியை பார்த்து தேம்பி தேம்பி அழுத நபர்.. ஜிவி பிரகாஷ் பகிர்ந்த டுவீட் வைரல்
x

விக்ரம், அனுஷ்கா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தெய்வதிருமகள். இப்படத்தை இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியிருந்தார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தெய்வதிருமகள். விக்ரம், அனுஷ்கா, அமலாபால், நாசர், சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அப்பாக்கும் மகளுக்கும் உள்ள பிணைப்பை மையப்படுத்தி வெளியான இப்படம் பலரையும் உருக வைத்தது. குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியும் அதில் இடம்பெற்ற ஜிவி பிரகாஷின் இசையும் இன்றளவும் கண்கலங்க வைக்கும் காட்சியாக உள்ளது.

இந்நிலையில் தெய்வதிருமகள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை பார்த்த நபர் ஒருவர் தேம்பி தேம்பி அழும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பலரும் லைக்குகளை குவித்து வருகின்றனர்.


Next Story