நான் ஒரு சின்ன வில்லன் பா.. ரசிகர்களுக்கு பதிலளித்த மிஷ்கின்


நான் ஒரு சின்ன வில்லன் பா.. ரசிகர்களுக்கு பதிலளித்த மிஷ்கின்
x

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், 'லியோ' படத்தில் விஜய்குரிய காட்சிகள் நிறைவு பெற்றதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கினை சந்தித்த ரசிகர்கள் இப்படம் குறித்து அப்டேட் கேட்டனர். அதற்கு மிஷ்கின், "எல்லாரும் விஜய் மாதிரி நடந்துக் கொள்ளுங்கள். அவர் மிகவும் இனிமையானவர். 'லியோ' படத்தில் நான் ஒரு சிறிய வில்லன்" என்று கூறினார்.


Next Story