சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்.. சிவகார்த்திகேயன் அறிவிப்பால் ரசிகர்கள் வருத்தம்


சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன்.. சிவகார்த்திகேயன் அறிவிப்பால் ரசிகர்கள் வருத்தம்
x

தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன், ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ, வேலைக்காரன், டாக்டர், டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன், ரவிகுமார் இயக்கத்தில் அயலான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பது, என் அன்பு சகோதர சகோதரிகளே, நான் டுவிட்டரில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க உள்ளேன். நான் விரைவில் திரும்பி வருவேன். என் படங்கள் குறித்த அப்டேட்களை என் குழுவினர் இங்கு பதிவிடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


Next Story