'மாமன்னன்' உதயநிதியின் கடைசி படம் என்பதில் எனக்கு விருப்பமில்லை -விஜய் ஆண்டனி


மாமன்னன் உதயநிதியின் கடைசி படம் என்பதில் எனக்கு விருப்பமில்லை -விஜய் ஆண்டனி
x

மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பிரலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கமல்ஹாசன், பா.இரஞ்சித், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா, வடிவேலு, சிவகார்த்திகேயன், சூரி, விஜய் ஆண்டனி, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் விஜய் ஆண்டனி பேசியதாவது, "மாரி செல்வராஜின் முதல் படமான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் அவர் தலைச்சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்துவிட்டார்.

உதயநிதி ஸ்டாலின் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். பெரிய இடத்தில் பிறந்தாலும் பாகுபாடின்றி வெளிப்படையாக இருக்கிறார். 'மாமன்னன்' உதயநிதி ஸ்டாலினின் கடைசி படம் என்று கூறுகிறார்கள். இதில் எனக்கு விருப்பம் இல்லை இருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக அவர் சினிமா விட்டு செல்கிறார் என்பதனால் அவரை வாழ்த்தி அனுப்ப வேண்டிய சூழ்நிலை. வடிவேல் இதுவரை செய்யாத ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இந்த வருடத்தின் முக்கியமான படமாக 'மாமன்னன்' அமையும் என்று கூறினார்.


Next Story