மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றம் மூலம் 2,085 வழக்குகளுக்கு தீர்வுபாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10¼ கோடி நிவாரணம்


மாவட்டத்தில்மக்கள் நீதிமன்றம் மூலம்  2,085 வழக்குகளுக்கு தீர்வுபாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10¼ கோடி நிவாரணம்
x
தினத்தந்தி 14 May 2023 2:37 AM IST (Updated: 16 May 2023 12:18 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2,085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம் மூலம் 2 ஆயிரத்து 85 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10¼ கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

மக்கள் நீதிமன்றம்

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், நாடு முழுவதும் மாதந்தோறும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக முடித்து வைக்கும் வகையில் இந்த மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில் நடந்தது. ஈரோடு சம்பத்நகரில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்துக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

ரூ.10¼ கோடி நிவாரணம்

கோர்ட்டுகளில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 6 ஆயிரத்து 202 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முடிவில் 2 ஆயிரத்து 85 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.10 கோடியே 28 லட்சத்து 90 ஆயிரத்து 180 நிவாரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக, மோட்டார் வாகன விபத்து வழக்கு ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு ரூ.37 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீட்டு தொகைக்கான ஆணையினை மாவட்ட முதன்மை நீதிபதி முருகேசன் வழங்கினார். இதில் குடும்ப நல நீதிபதி ஹேமா, சிறப்பு மாவட்ட நீதிபதி லீலா மற்றும் சார்பு நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் (பொறுப்பு) சண்முகபிரியா செய்திருந்தார்.


Next Story