ஜெயிலராக நடிக்கும் ஜெயம் ரவி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்


ஜெயிலராக நடிக்கும் ஜெயம் ரவி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
x

ஜெயம் ரவி நடித்து வரும் படம் சைரன். இப்படத்தின் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வரும் 'சைரன்'. ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரம் இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்ஷன், க்ரைம், த்ரில்லர் ஜானரில் உருவாகும் 'சைரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் 'சைரன்' படத்தில் புதிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு வருகிற 19ம் தேதி தொடங்கவுள்ளதாகவும் இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாகவும் ஜெயம் ரவி ஜெயிலர் கதாப்பாத்திரத்திலும் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story