'பையா 2' படத்தின் கலக்கல் அப்டேட் கொடுத்த லிங்குசாமி


பையா 2 படத்தின் கலக்கல் அப்டேட் கொடுத்த லிங்குசாமி
x

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘பையா’. இந்த படத்தில் கார்த்தி மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'பையா'. லிங்குசாமி இயக்கத்தில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது வரை ரசிகர்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளது. கார்த்தியின் சினிமா பயணத்தில் இப்படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.

'பையா' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாகத்தை விரைவில் இயக்குனர் லிங்குசாமி இயக்கவுள்ளதாகவும் இதில் கார்த்திக்கு பதில் ஆர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், 'பையா 2' படப்பிடிப்பு குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லிங்குசாமி 'பையா2' திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறினார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story